Skip to content
Monday, January 18, 2021
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
Nri தமிழ்

Nri தமிழ்

தமிழால் ஒன்றிணைவோம்

  • செய்திகள்
  • உலகம்
  • ஆரோக்கியம்
    • வீட்டு வைத்தியம்
    • சுய பிரகடனம்
  • உலக பொது நிகழ்வுகள்
    • வரும் நிகழ்ச்சிகள்
  • விவசாயம்
  • ஆன்மீகம்
    • சித்தர்கள்
  • NRI தமிழ் டிவி
  • சமூக ஊடகப்பதிவு

வாழை இலையும் – ஃபாஸ்ட் புட் கலாச்சாராமும்

சமூக ஊடகப்பதிவு
May 3, 2019May 3, 2019Nri தமிழ்

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல, நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.
என்ன பதில் சொல்வது இதற்கு..?
.
லாஜிக்படி பார்த்தால், எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,”நீங்களே சொல்லுங்க ..!”என்றேன்.
.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# “புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!
இராமாயண காலத்தில் ….
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்
.
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்.
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்

# கதை சுவையாகத்தான் இருக்கிறது…!
.
நல்லது… வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் :
.
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் … ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?
.
சிம்பிள் ..!
.
இலையின் நுனி, சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
.
ஏன்..?
.
நாம் சாப்பிடும்போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
.
சரி …உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
.
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
.
சாதம், காய் கறிகள் … இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை, பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
.
இல்லை..!
.
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்… அந்த இனிப்பு, உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து, ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று, வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது. அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து, எப்படி பரிமாறுவது, எதை முதலில் சாப்பிடுவது …
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
.
ஆனால் ….
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,

அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி, அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை,
இனி யார் வந்து திருத்துவது..?

  • யாரோ

Share this:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)

Post navigation

தமிழ் இலக்கணமும் தொல்காப்பியமும்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129வது பிறந்தநாள் – ஏபரல் 29

தொடர்பு பதிவு

பொங்கலுக்கு எவ்வளவு செலவு செஞ்ச?

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

அமைதி

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

முத்தாலங்குறிச்சி காமராசு

April 13, 2019Nri தமிழ்


edificetravels

  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil
  • லண்டன் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை : பிரிட்டனில் மூன்றாம் கட்ட அலையை தடுக்க வேண்டும்.

    December 31, 2020December 31, 2020Team Nritamil

Nritamil.com

சமீபத்திய பதிவுகள்

  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil
  • லண்டன் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை : பிரிட்டனில் மூன்றாம் கட்ட அலையை தடுக்க வேண்டும்.

    December 31, 2020December 31, 2020Team Nritamil

எங்களை இணைக்கவும்

© 2019 NriTamil, Privacy Policy. | Theme: News Portal by Mystery Themes.
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்புகொள்ள
  • தனியுரிமை கொள்கை