நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தும் திட்டத்தில் கலிபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள வானவில் அறக்கட்டளைக்கும் நிதி உதவி ஒப்பந்தம் நடைபெற்றதை தொடர்ந்து, மே 27, 2021 ஆம் நாள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிர்வாகக்குழு அங்கீகாரத்துடன் அதன் பொருளாளர் 12 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் நன்கொடையை வானவில் அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.
ஒரு லட்சம் டாலர்கள் நிதி வேண்டிய மன்றத்தின் இலக்கை நோக்கி மடை திறந்த வெள்ளம் போல் கொடையை அள்ளி அள்ளிக் கொடுத்த வளைகுடா பகுதி உறவுகளுக்கு நன்றி எனவும், இந்தப் பெருந்தொற்று காலத்தில் உணவகங்கள், முன் சம்பவிக்காத சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிதி திரட்டும் நிகழ்வில் திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகம்(அமெரிக்கா கிளை) 2000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கி உறுதுணையாக நின்றமைக்கும் நன்றி எனவும் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்றிணைவோம்! உயிர் காப்போம்!