உத்வேகத்துடன் பணியாற்றினால் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாரப்பள்ளியில் புதியதாகக் கட்டுப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்களை அவர் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி அறிவித்த சிறப்பான திட்டங்களின் எதிரொலியாகதான் திரிபுராவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது என்றார்
