மோடி தலைமையில் 2024ல் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் – அமித்ஷா பேச்சு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

2024 தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு நாள் வடகிழக்கு பயணத்தில், அசாமில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக வடகிழக்கு இருந்தது. ஆனால், தற்போது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எட்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெளியேற்றப்பட்டுள்ளது. 120 கோடி மக்கள் மோடிஜியின் நீண்ட ஆயுளுக்காக இரவும் பகலும் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் மோடிஜியை எவ்வளவு அதிகமாக அவதூறு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை இன்னும் பிரகாசமாக மலரும். ” என்று அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *