வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கே சென்றப் பின் இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகளை பெரும் திரளாகக் கூடி கொண்டாடுவது வழக்கம். அரபு, வளைகுடா நாடுகளில் தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என பலரும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக யுஏஇ துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியன் வெல்ஃபேர் போரம் என்று ஓர் அமைப்பை உருவாக்கி அவர்களின் கோரிக்கைகளை, குறைகளை தீர்த்து வருகிறது இந்த அமைப்பு. அதே போன்று சவுதி அரேபியா ரியாத்தில் இந்தியர்கள் நலவாரியத்தின் சார்பாக ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பான்மையான இந்தியர்கள் இதில் கலந்து கொண்டர்.