பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெட்ரோபோலிஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் உயிர் பிழைப்பர் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.
வியாழன் அன்று பிரேசிலிய நகரமான பெட்ரோபோலிஸ் முழுவதும் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 117 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, 100 க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது.
அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைக்கு மத்தியில், உள்ளூர் அதிகாரிகள் 134 பேரைக் காணவில்லை என்று கூறியுள்ளனர், பலர் ரியோ நகருக்கு மேலே உள்ள மலைகளில் அமைந்துள்ள ஜேர்மன் நகரத்தின் அடியில் சேற்றில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் நிலச்சரிவு போன்ற அழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஒரு தன்னார்வ மீட்பர், இடிபாடுகளுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களை கண்டுபிடிப்பது இப்போது “நடைமுறையில் சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.
பெட்ரோபோலிஸ் ரியோவின் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் பிரபலமான இடமாகும். இப்பகுதி அதன் இலைகள் நிறைந்த தெருக்கள், கம்பீரமான வீடுகள், ஏகாதிபத்திய அரண்மனை, ஒரு அருங்காட்சியகம் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் இயற்கை அழகுக்காக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற இடமாகும்.
செவ்வாய் கிழமை இந்நகரின் மேல் புயல் மூன்று மணி நேரத்தில் நகரத்தில் 258 மில்லிமீட்டர் (10 அங்குலம்) மழையை கொட்டியது, இது முந்தைய மாதத்தில் பெய்த மொத்த மழைக்கு கிட்டத்தட்ட சமமாக இருந்தது என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோபோலிஸில் இந்த வாரம் பெய்த மழை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிலேயே மிக அதிகமாக பெய்த மழையாகும்.
வியாழன் அன்று முறையாக அடையாளம் காணப்பட்ட சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன, இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
சரிவு ஏற்பட்ட பகுதியில் , ஒரு தாய் தனது மகளின் உடலை மீட்க கையில் மண்வெட்டியுடன் இடர்பாடுகளை நீக்கி வருகிறார். பல்வேறு குடும்பங்கள் சொந்தங்களை இழந்து கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளன.
உயிருடன் இருப்பவர்களைக கண்டுபிடிப்பதில் உறவினர்கள் நம்பிக்கையை விட்டுவிட விரும்பவில்லை என்றாலும், பலர் ”இது ஒரு உடல்களை மீட்கும் நடவடிக்கை, மீட்புப் பணி அல்ல என்பதே யதார்த்தமானது” என்று அழுது புலம்புகின்றனர். உள்ளூர் பிணவறைகள் வெள்ளத்தில் சிதைந்திருந்தாலும் பிணங்களால் குவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் ஒரு பேரழிவு வருடத்தின் முதல் பாதியிலேயே நம்மை நிலைகுலைய செய்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இடர்பாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக காப்பாற்றப்படவும் இறைவனிடம் வேண்டுதல் வைப்போம்.