உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்து இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி வானிலை விளையாட்டு

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை அதிக அளவில் ஏறிய சாதனையைத் தான் படைத்துள்ளார்.
அதுவும் இரண்டு முறை மூன்று முறை அல்ல.. மொத்தம் 17 முறை. சமீபத்தில் கென்டன் தனது 17வது முறை சிகரம் ஏறும் பயணத்தை முடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இந்த பயணத்தின்போது, கென்டன், அவரது வழிகாட்டி டோர்ஜி கியெல்சன் ஷெர்பா மற்றும் மற்றொரு நண்பருடன் உலகின் உச்சியை அடைந்துள்ளார்.
கென்டனுடைய வழிகாட்டியான ஷெர்பா செல்வதும் இது முதல் முறை அல்ல. ஷெர்பா பலமுறை எவரெஸ்ட் மற்றும் K2 மலைச்சிகரங்களை ஏறியுள்ளார். இந்த் சாதனை குறித்து, கென்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில சுவாரசிய அனுபவங்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “01:30 இங்கிலாந்து நேரப்படி, கென்டன், ரிச்சர்ட் மற்றும் டோர்ஜி கியெல்சன் ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். கென்டன் தனது 17வது மலை உச்சி பயணத்தை அடைந்தார்!! சிகரத்தின்கால நிலைமைகள் நம்பமுடியாத அளவிற்கு குளிர்ச்சியாக இருந்தன, டிராக்கர்/காம்ஸ் செயலிழந்து பல தொழில்நுட்ப தோல்விகளுக்கு வழிவகுத்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது நேபாளத்தில் காலை 6:15 மணிக்கு எவேறேச்ட் சிகரத்தை அடைந்த 49 வயதான கென்டன் 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். அதன் பின்னர் 17 முறை ஏறிவிட்ட அவர் இந்த முறை சிகரத்தை அடைந்து ,கீழே இறங்கிய பிறகு சொன்ன விஷயம் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் எவரெஸ்ட் சிகரம் பனியை இழந்து வருவதாகவும், வறண்ட மற்றும் பாறைகளாக மாறியுள்ளது என்றும் கூறினார்.
இது ஒரு தீவிர காலநிலை மாற்ற கவலையை இயற்கை ஆர்வலர்களிடமும் மலை ஏற்றம் செய்பவர்களிடமும் எழுப்பியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கடந்த நூற்றாண்டில் பூமியின் வெப்பநிலை சராசரியாக 0.74 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆனால் இமயமலைத் தொடர் உலக சராசரியை விட வெப்பமயமாதலைச் சந்தித்து வருகிறது. இதனால் நேபாளத்தின் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *