புரூக்ளின் நகரின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் ஒரு நாள் தேடலுக்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நியூயார்க் நகர போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்துக்குரிய நபராக கைது செய்யப்பட்டுள்ள இவன் பெயர், ஃபிராங்க் ஜேம்ஸ். 62 வயதாகும் இவன் மீது தீவிரவாத தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையத்தில் 33 முறை சுட்ட ஃபிராங்க் ஜேம்ஸ், யூடியூப்பில் பிரபலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க அரசியல் தொடர்பான பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளான். இதனிடையே, தான் யூடியூப்பின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக அவர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.