நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செல்லும் முன்னாக இந்த சம்பவத்தை நிகழ்த்தி விட்டு அந்த அடையாளம் தெரியாத நபர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில் பெட்டிக்குள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசிய முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது. மேலும் வெடிபொருட்களையும் அவன் இரயில் பெட்டியில் வைத்திருந்திருக்கலாம் என்னும் சந்தேகம் சோதனையின் பின் களையப்பட்டது.
கொலையாளி யார் என்பது குறித்தும், இந்தக் கொலைகளுக்கான காரணங்கள் குறித்தும், கொலையாளி உபயோகித்திருந்த ஆயுதங்கள் குறித்தும் தகவல்கள் எதுவும் கிடைக்காததால் விசாரனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.