அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வருகின்ற அக்டோபர் 28ம் தேதி தமிழ் ஸ்டேண்டு-அப் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஜிகே மற்றும் ஆனந்த் இணை இப்போது அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சியாட்டில் மட்டும் டலாஸ் நகரில் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்று பெறும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிட்டத் தக்கது. இப்போது மீண்டும் ஓர் நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 28ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காந்தி கணக்கு என்று பெயரில் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. 90 நிமிடங்கள் காலளவு கொண்ட இந்த நிகழ்ச்சி, கவலையை மறந்து சிரிப்பை தரும் மருந்தாக அமையும் என்பதில் சந்தேசம் இல்லை. பாஸ்கர் என்ற நகைச்சுவை கலைஞரோடு சேர்ந்து ஜிகே மற்றும் ஆனந்த கலக்கவுள்ளனர். மறக்காமல் 90 நிமிட தடையில்லா சிரிப்பு வெடியை அனுபவிக்க தவறாதீர்கள்.
அக்டோபர் 28ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10 டாலர் டிக்கெட் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு இலவசம். மாலை 7மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.