மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்
Short Description
தமிழ்ச் சங்கம்
Description

"மனித குலத்தில் ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது மொழி. மொழிதான் நம் முகம், நம்முடைய இனம்தான் சமுதாயத்தில் நமக்கான அடையாளம். தாய்நாடு விட்டுத் தொலைதூரம் வாழ்ந்தாலும் தமிழால் இணைந்து வாழ்ந்து வருகிறோம். நாடு கடந்து வாழ்ந்தாலும் நம்மை இணைப்பதுவும், இன்பமுற இயங்கச் செய்வது தமிழும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளுமே! அத்தகைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்துத் தமிழர்கள் அனைவரும் சங்கமித்து மகிழ்வுற அமைக்கப்பட்டதே நமது மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம், தமிழரின் பண்பாட்டையும் தமிழின் சிறப்பையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையையும் பொறுப்பையும் மனதில் வைத்து 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்பாகும். அயல்நாட்டில் வாழும் நிலையில், தமிழர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் ஒற்றுமைப்படச் செய்யும் சீரிய நோக்குடன் 38 ஆண்டுகளாக இன்றுவரை செயல்பட்டு வருவது மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்"

Phone
(469)885 0995
Address
9263 Cherry Brook Ln, Frisco, TX
ZIP Code
75033

Send Message to listing owner