ஒரு அமைப்பின் பலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படும். அந்த வகையில் நமது தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான மூலைக்கல்லாக இருந்து பேருதவி புரிவது நீங்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணமே. இந்தப் பணத்தைக் கொண்டுதான் நாம் விழா நடத்துவதற்குத் தேவையான அரங்கம், ஒலி ஒளிக் கருவிகள், பரிசுகள், விருந்தினர் செலவுகள் ஆகியவற்றைச் செய்துவருகிறோம்.இதற்குப் பிரதிபலனாக உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் நமது பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியை வழங்குகிறோம். கட்டணம் செலுத்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கான உரிமையையும் பெறுகிறார்கள். எனவே தயவுசெய்து உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்
Listing Category
Short Description
தமிழ்ச் சங்கம்
Description