"ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்கம்(HATS) 1970-ஆம் ஆண்டு தமிழ் உணர்வுள்ள சில தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழ் மொழி, இனம், கலை, பண்பாடு மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் அறிவுசார் விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு கற்பித்து வழிகாட்டும் திண்ணத்துடன் தொடங்கப்பட்டது. குழந்தைகள் நன்கு தமிழ் கற்று, நம் மொழியின் தமிழ் அருமையை உணர்ந்துகொள்ளும் நோக்கில் நம் பகுதியில் நடத்தப்படும் ஹரி தமிழ் பள்ளிக்கு தமிழ்ச்சங்கம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறது நமது ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அமெரிக்காவில் உள்ள பழமையான தமிழ்ச்சங்கங்களில் ஒன்றாகவும், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (FETNA) உருவாக்கத்தில் ஓர் அங்கமாக இருந்ததை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்!
நடப்பு திருவள்ளுவர் ஆண்டு 2051-ல் (ஆங்கில வருடம் 2020) தனது 50 வது பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட இருக்கும் நமது ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இவ்வட்டார தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு நல்ஆதரவினை அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
"
ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ் சங்கம்
Listing Category
Short Description
தமிழ்ச் சங்கம்
Description