அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது. இதில் பொறியியல் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் என்ற தலைப்பில் இந்த வர்த்தக கருத்தருங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு துபாய் அஸ்பா குழுமத்தின் தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. பொறியியல் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மற்றும் வர்த்தகம், புதிய முதலீடுகளை ஊக்குவிப்பு போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் இந்திய வர்த்தக துறையின் கீழ் செயல்படும் இ.இ.பி.சி நிறுவனத்திற் தென் பிராந்திய இயக்குநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விக்னேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் இந்த கருத்தரங்கின் நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கமளித்தனர்.