கம்போடியாவில் ஆற்றுத் திருவிழா “போன் ஒம் துக்”

உலகம் சிறப்பு

பெருமைமிகு கம்போடிய நாட்டில் நவம்பர் பத்தாம் தேதி “போன் ஒம் துக்” (BON OM TUK) என்கிற ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.தொன்மையான வரலாறு கொண்ட கம்போடிய நாட்டின் முக்கிய சமய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட கூடைப் போலவும்,படகு போலவும் மலரால் அலங்கரித்து அதில் தீபமேற்றி ஆண்,பெண் என அனைவரும் கையில் ஏந்தி ஊர்வலமாய் சென்று ஆற்றில் விடுவது வழக்கம். மேலும் நம்மைப் போலவே புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கும் வழக்கமும் கூடுதல் சிறப்பு…. இசை,நடனம்,கூட்டுக்களிப்பு என்று விழா களைக்கட்டியது.

இவ்விழா சியம்ரீப் ப்ராவின்சின் கவர்னர் திரு.எச்.இ.திய சீய்ஹா தலைமையிலும்,நமது “சொக்கையா” என்று அன்பாக அழைக்கப்படும் கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இயக்குநர் திரு.மோர்ன் சொப்பீப் முன்னிலையிலும் மற்றும் திரு.கெமரா மற்றும் பல நண்பர்களின் அழைப்பின் பேரில் அங்கோர்வாட் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.இரமேஷ் மற்றும் செயலாளர் திரு.ஞானசேகரன் மகிழ்ச்சியாக பங்கேற்று விழா குழுவினரோடு அளவளாவினர்.

R. Gnanasekaran Secretary,
Angkor Tamil Sangam, Combodia.