கம்போடியாவில், Cambodia South East Asian Games விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும், விழிப்புணர்வு பயணமாக, தன்னார்வத்துடன் குழுவாகச் சென்று ,BMW மோட்டார் சைக்கிள் வீரர்கள், மக்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. 38°c க்கும் மேற்பட்ட அளவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது இக்குழுவினர் மோட்டார் வண்டிகளிலும், திறந்த கார்களிலும் சென்று மக்களைச் சந்திப்பது கம்போடிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.
கம்போடியாவில் 24மாவட்டத்தை பத்து நாட்களில் 3479கி.மீ.மோட்டார் சைக்கிளில் சுற்றியுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பின் இவ்விளையாட்டு நிகழ்ச்சிகள் கம்போடியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. கம்போடிய அரசு இக்குழுவினருக்கு பல வகையில் ஆதரவு அளித்து வருகிறது. இக்குழுவினருள் ஒருவரான கம்போடியாவில் உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த Dr.மா.இரமேஷ்வரன், கம்போடிய அமைச்சர் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றினார்.