கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது.
இந்த போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக்கூரும் வகையில் மே18ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவுநாள் எனவும் தமிழர் இனப்படுகொலை நாள் எனவும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மே18ம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இதனை ஏற்றுகொண்டுள்ள முதல் நாடு கனடா ஆகும்.
கனடா எம்பி ஹரி ஆனந்தசங்கரி இந்த தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்பதாகவும், அதில் பலியானவர்களை நினைவு கூரும் விதமாக மே18ம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக இனி முதல் கடைபிடிக்கப்படும் எனவும் அவர் பேசினார். ஏற்இந்த தீர்மானம் ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.