மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்கதக்கது – எதிர் மனுக்கள் தள்ளுபடி, உச்சநீதி மன்றம் அதிரடி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களையும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், பொருளாதார ரீதியாக கொள்கை முடிவு என்பதால், அதனை திரும்பப் பெற உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதாவது புழக்கத்தில் இருந்த 85 சதவிகித நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் பணமதிப்பிழக்கு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்பதால், திரும்பப் பெற முடியாது என்றும், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படியே மத்திய அரசு செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *