தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் பெற்றொர்கள் தடுமாறி வந்தனர். ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 97.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 92.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது.
இந்த முறை சிபிஎஸ்இ தேர்வில், திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரில் 99.18% பெற்று இரண்டாம் இடத்திலும், சென்னை 99.14% பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.