இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – மத்திய சுகாதாரத் துறை தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைபோல தற்போது செயல்பட வேண்டும் என்றும் வைரஸ் காய்ச்சலால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோய், கல்லீரல், கணைய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் இன்புளூயன்சா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் போன்று இது கொடிய பரவல் இல்லையேன்று தெரிவித்தபோதும் பரவல் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.