தமிழகத்தின் தலைநகர், தென்னிந்தியாவின் முதல் மெட்ரோ நகரமாம் சென்னை மாநகரம் உருவாகி 383 ஆண்டுகள் ஆகின்றன. ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் ஆண்டு தோறும் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாருக்கும் அவரவர் ஊர், நகரம் மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் மிகவும் பிடித்த நகரம் என்றால் அது சென்னை மாநகரம் மட்டும் தான். சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று உரிமையோடு அழைப்பர்.
சென்னையில் பூர்வக்குடிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து குடியேறிய மக்களும் அடங்குவர்.
இவ்வாறு ஒவ்வொருவரும் சென்னையை தங்களது பிறப்பிடமாகவே கறுதுகின்றனர். சென்னையின் அடையாளம் மெரினா கடற்கரை. இது உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை. சென்னை ஓர் கலாச்சார நகரம் என்றும் அழைக்கப்படும். மிகவும் பிரசித்திப்பெற்ற கோயில்கள் சென்னையில் பல உண்டு. மைலாபூர் கபாலீஷ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் என பல உண்டு.
அன்றைய ஆட்சியாளர் சென்னப்பநாயக்கரிடம் இந்நகரை விலைக்கு வாங்கிய பிரிட்டிஷ்காரர்கள் இதற்கு மெட்ராஸ் என அழைக்கத் தொடங்கினர். சென்னப்பட்டினம் மெட்ராஸ், மெட்ராஸபட்டினம் எனற பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. மெரினாக் கடற்கரையை ஒட்டிய புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங், சென்னை சென்ட்ரல், ராயபுரம் ரயில் நிலையம் போன்றவைகள் இதில் அடங்கும்.
விடுதலைக்கு பின் மெட்ராஸ் தலைநகரமாகக் கொண்டு சென்னை மாநாகாணமாக செயல்படத் தொடங்கியது. அதன்பின் தமிழ்நாடு என்று மாநிலம் உருவாகி மெட்ராஸ் தலைநகரமாகியது. தமிழில் சென்னையென்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் 1996ம் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. என்னதான் சென்னை என்று இன்றளவும் அழைக்கப்பட்டாலும் பூர்வக்குடிகளுக்கும், அங்கு வாழும் பிற மக்களுக்கும் மெட்ராஸ் என்றுமே உயிர்தான்.