ஆண்டுதோறும் சென்னை மாநகரம் உருவான ஆகஸ்ட் 22ம் தேதி நகரம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். சென்னை தினத்தின் சிறப்புகளை குறிக்கும் வண்ணம் பல கலை நிகழ்ச்சிகள், மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழகத்து தமிழர்களுக்கு மட்டும் சென்னை தினம் சிறப்பானது அல்ல. அயல்நாடுகளில் வசிக்கும் நம் தமிழர்களுக்கும் தமிழகத்தின் தலைநகர் என்றுமே பெருமைதான். நாடு கடந்து ஆண்டுகள் பல ஆனாலும் தமிழன் என்ற பெருமையும், அடையாளமும் என்றுமே தமிழர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நியூயார்க் நகரில் சென்னை தின கொண்டாட்டங்கள் கலைகட்டியது. கொண்டாட்டமானது அம்மன் ஊர்வலத்துடன் தொடங்கி, அம்மன் பக்தி பாடல்களும், பிற தமிழ் பாடல்களும் பாடி நியூயார்க் நகர வீதிகளில் உலா வந்தது. இதில் நியூயார்க் நகர் வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டனர். தமிழகத்தின் பெருமைகள், அதை சார்ந்த நிழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த இதுவொரு நல்ல வழியாக இருக்கும் என்பது தமிழ் பெற்றோர்களின் எண்ணம்.