ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இன்னும் வந்து சேரவில்லை. அவர்கள் வந்த பிறகு, சிஎஸ்கே முழு பலத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் தொடக்கமே சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற 2021ஆம் ஆண்டு ஸ்கிரிப்ட் போல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 2020ஆம் ஆண்டு சென்னை அணி படுதோல்வியை தழுவியது, 2021ஆம் ஆண்டு சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி அணியிடம் தோல்வியை தழுவி இறுதியில் சாம்பியன் பட்டம் வென்றுது. 2023ஆம் ஆண்டும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி தற்போது தனது 2வது லீக் ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்ள உள்ளது.