கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, 3 ஆண்டுகள் கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் விமான சேவைகளும் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் மக்கள் வெளிநாடுளுக்கு பயணம் மேற்கொள்வது சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளுக்கு விமானங்கள் அதிகம் இயக்கப்படவுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.