தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரிஃபாரன் ஹிட் வெப்பம் பதிவானதாகவும், 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம் நிலவியதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் உச்சம் காட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 100 பாரான்ஹீட்டை கடந்து வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை மீனப்பாக்கத்தில் அதிகபட்சமாக 108 புள்ளி 86 பாரான்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 பாரான்ஹீட் வெயில் கொளுத்தியது.
கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தருமபுரி, நாகை, நாமக்கல், சேலம், தஞ்சை உள்பட 20 இடங்களிலும் 100 பாரான்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவானது. இதே போல் புதுச்சேரியில் 106.16 பாரான்ஹீட்டும் காரைக்காலில் 100.94 பாரான்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது