சென்னையில் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக மாறிய சென்னை மெட்ரோ ரயில்

கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட நடப்பு 2023 ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர். கடந்த ஆண்டில் 1.1.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13.1.2023 அன்று 2 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தியும், பயண அட்டைகளை பயன்படுத்தியும் அதிகளவில் பயணிகள் பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *