சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே சீனாவில் வழக்கமாக கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறார்கள்; சமீபத்திய தரவுகளின்படி சீனாவில் 90 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகளின் ஆற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திறந்தவெளியில் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. 141 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட சீனாவில் 90 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.