இந்தியா தனது அண்டை நாடுகளுடன் வெளியுறவுக் கொள்கை, நட்புறவு என அனைத்தையும் அரசியல் ரீதியாக கையாண்டாளும், சில நேரங்களில் அரசியல் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வருவது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டாலும் அதனையும் மீறி சில நேரங்களில் பதட்டச் சுழ்நிலைகள் உருவாகும்.
இந்தியத் துணைக்கண்டம் தெற்காசிய நிலப்பரப்பில் மிக முக்கிய நாடாகப் பார்க்கப்படுகிறது. நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மியான்மார் போன்ற நாடுகள் பெரிதும் இந்தியாவையே நம்பியுள்ளன. பாகிஸ்தான் நாடு மட்டும் தீவிரவாதம், காஷ்மீர் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு என்று இந்தியாவிற்கு குடைச்சலாகவே இருந்து வருகிறது சுதந்திரம் அடைந்த நாள்முதல்.
பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவை பொருளாதார ரீதியில் பெரிதும் நம்பிருக்கின்றன. இலங்கை தற்போது பெரும் பொருளாதார விழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அரசியலில் மிகப் பெரிய குழப்பத்தில் உள்ளது. சீனா கொடுத்த கடனை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்துவதால், இலங்கை கிட்டத்தட்ட சீனாவிற்கு அடிபணிந்துவிட்டதாகவே தெரிகிறது.
சீனா உளவுப் போர்க்கப்பல் யுவான் வாங்-5 கடந்த மாதம் சீனாவிலிருந்து புறப்பட்டு இலங்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்படலாம் என இந்திய எதிர்கட்சிகள் அனைத்தும் தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர். முதலில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஹம்பாத்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழக்கத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சீனப் போர்க்கப்பல் அணுமின் நிலையத்தை உளவு பார்க்க நிறுத்தப்பட்டுருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்னவே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் பகுதிகளை சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால், இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டு, சீன நிறுவனங்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதால் இரு நாடுகளுக்கும் சுமூக உறவில் சிறு சுணக்கம் உள்ளது. இந்நிலையில் இந்த உளவுப் போர்க்கப்பல் இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.