சீனா தைவான் உறவில் சிக்கல் – ஐபோனுக்கு பாதிப்பு

அரசியல் உலகம்

உலக நாடுகளில் பல நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சுமூகமான சூழ்நிலை இல்லாதது மற்ற பிற நாடுகளுக்கு எச்சரிக்கையையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் அனைத்து நாடுகள் மத்தியிலும் ஓர் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதே திதர்சனம். இப்போரால் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமும், விலைவாசி உயர்ந்து பொருளாதாராம் பாதிக்கப்படும் என்ற கவலையும் உண்டாகியிருக்கிறது.
இது போன்ற நிலைமை தான் சீனா தைவான் உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசலிலும். 1949ல் சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக சீன ஆட்சியாளர்கள் பக்கத்து தீவான தைவானில் அதிகாரம் பெற்று ஆட்சி செய்யத் தொடங்கினர். பின்னர் அது சீனனாவின் ஒரு பகுதியென்றே கருதி வந்தனர். பின்னர் 1979ல் அமெரிக்கா தைவானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா அனைத்து உதவிகளும் தைவானுக்குச் செய்யும். இதுவே சீனாவிற்கு பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது. தைவான் அமெரிக்க ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தால் தைவான் தீவு அமெரிக்காவிற்கு இணைக்கும் மையப்புள்ளியாக இருந்தால் சீனாவிற்கு பேராபத்து என்று அந்நாடு கருதுகிறது.
சமீபத்தில் அமெரிக்கா சபாநாயகர் நான்சி பலோசியின் தைவான் வருகையை சீனா கடுமையாக எதிர்த்தும், எச்சரித்தப் பின்னரும் அந்நிகழ்வு நடந்தது.
இதனால் தைவான் நாட்டில் உற்பத்தியாகும் செமி கண்டக்டர் எனும் மின்னணுப் பொருள் பெரும் பாதிப்பைச் சந்திக்கவுள்ளது. 90% செமி கண்டக்டர் உற்பத்தி தைவானில் மட்டுமே நடைபெறுவதால், மோட்டோரோலா, ஆப்பிள் போன்ற பெறுவனங்கள் தங்கள் புதுப்படைப்பின் அறிமுக நிகழ்வை நிறுத்தி வைத்துள்ளன. ஐபோன் 13 வகையை அறிமுகம் செய்வதாக ஆப்பிள் திட்டமிட்டிருந்த நிலையில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.