இந்த வாரச்சின்னத்திரை

சின்னத்திரை செய்திகள்

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையின் சுவாரசியங்களை அள்ளி வந்து உங்களுக்கு தொகுத்து அளிக்கும் இந்த வாரச் சின்னத்திரையில் கடந்த வாரத்தின் நிகழ்வுகளைக் காண்போம்.

கொரோனா காரணமாக டிவி சீரியல்களின் படபிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் விஜய் டிவி நிறுவனம் அதில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி -2 மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களின் நடிகர்களை ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைத்து படபிடிப்பை நடத்தி வரும் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

டிஆர்பியில் முதலிடத்தில் உள்ள சன் டிவியின் ரோஜா தொடரிலிருந்து அதன் வில்லியாக நடித்து வரும் ஷாமிலி ராஜ்குமார் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக உணர்ச்சி பொங்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சினிமா மற்றும் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் மங்களநாத குருக்கள். நிஜத்திலும் குருக்களான இவர் இறந்துவிட்டதாயும், இறுதி சடங்கிற்கு பணம் தேவைப்படுவதாயும் கூறி ஒரு கும்பல் சில பிரபலங்களிடம் பணத்தைக் கறந்து மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது குறித்து குருக்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி தொடர் மூலம் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்களைப் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியின் பிரபல ரியாலிட்டி ஷோவான இந்தியன் ஐடல் தொடரில் அனைத்து போட்டியாளர்களையும் புகழுமாறு வற்புறுத்துவதாக கூறி பாடகி சுனிதி சவுஹான் விலகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா காரணமாக தொடர்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் பழைய நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பி வருவதால் விஜய் டிவியின் டிஆர்பி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. சன் டிவி இந்த வாரமும் தொடர்து முதலிடத்தில் உள்ளது. சன் டிவியின் நிகழ்ச்சிகளே முதல் ஐந்து இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சுவாரியமான செய்திகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published.