இந்த வாரச் சின்னத்திரை

சின்னத்திரை செய்திகள்

கொரோனா நம்மை முடக்கியுள்ள இந்த காலத்தில் நமக்கு உற்ற துணையாக இருந்து நம் நேரத்தைக் கடத்துவது தொலைகாட்சியில் வரும் சின்னத்திரை நிகழ்ச்சிகள். அத்தகைய நிகழ்ச்சிகளின் வாரந்திர சுவாரசிய தொகுப்பே இந்த வாரச் சின்னத்திரை.

விஜய் டிவியின் மிகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். தனக்கென தனி இரசிகர் படையைக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கி போட்டியாக சில பிரபலங்களை ஒரு தீவில் நூறு நாட்கள் இருக்க வைத்து நிகழ்ச்சியை நடத்த ஜீ தமிழ் நிறுவனம் வேலைகளைத் துவக்கியுள்ளது. இதற்காக பனாமா அருகே ஒரு தனித் தீவை அந்நிறுவனம் வாடகைக்கு எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குக் வித் கோமாளி – 2 நிகழ்ச்சி மூலம் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டவர் சிவாங்கி. இவர் சமீபத்தில் நடிகர் அஜீத் நடித்த கடைசி திரைப்படம் எது என ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது பதில் தெரியாமல் விழித்ததால் அஜீத் ரசிகர்களால் தொடர்ந்து வசைபாடப்பட்டு வருகிறார்.

விஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர்களைக் கொண்டு புதியதொரு நகைச்சுவை நிகழ்ச்சியை இனிவரும் சனி ஞாயிறுகளில் அந்நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நின்று போன சின்னத்திரை தொடர்களுக்கான படபிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளது.

தனுஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்சில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த வாரமும் விஜய் டிவியின் டிஆர்பி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. சன் டிவியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.