நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சித்தர்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வட அமெரிக்கா

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் கூறிய கைலாசா எங்கு இருக்கிறது என யாருக்கும் தெரியாது. அந்நாடு ஒரு புதிராகவே உள்ளது. அந்த மர்ம நாட்டை பலரும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டுள்ளது.
ஒப்பந்தப்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அம்சங்களில் இருதரப்பும் சேர்ந்து செயல்படும். ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா, நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *