கம்போடியா நாடும், தமிழ்நாடும் பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இருநாடுகளும் கலாச்சாரம், கலை மற்றும் மொழி சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கலை பிரிவும், தமிழ்நாடு கலைப் பிரிவும், ஞானம் டிராவல்ஸ் மற்றும் அங்கோர் தமிழ்ச் சங்கம் இணைந்தீ நடத்திய நடன நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நடன நிகழ்ச்சி அங்கோர்வாட்டின், 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “பிரசாத் பை” சிவன் கோயிலில் நடைபெற்றது. அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் சீனு ஞானம் பயண ஏற்ப்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.
