இந்தியாவைச் சேர்ந்த தொழில்துறையில் பயணிக்கும் கௌதம் அதானி உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராகவும் உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா வரையில் பலர் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றாலும் ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியைப் போல் யாரும் பெரும் தொகையைச் சம்பாதிக்கவில்லை.
ஆனால் சம்பள அளவில் பார்த்தால் முகேஷ் அம்பானியை விடச் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் பல மடங்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த முக்கியமான பட்டியலில் தற்போது கூடுதலாக ஒரு இந்தியர் சேர்ந்துள்ளார்.
உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வந்துள்ள ரவிகுமார், தற்போது முகேஷ் அம்பானியை விட அதிகமாகச் சம்பாதிக்க உள்ளார்.
கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டமும், செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர் ரவி குமார். தற்போது காக்னிசன்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரவி குமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து TransUnion மற்றும் மென்பொருள் சேவை அளிக்கும் Digimarc Corp இன் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். அக்டோபர் மாதம் இன்போசிஸ் தலைவர் மற்றும் சிஓஓ-வான ரவி குமார்-ஐ காக்னிசென்ட் அமெரிக்காஸ் பிரிவின் தலைவராகப் பணியில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார், மேலும் ரவி குமார் joining bonus ஆக 6 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றுள்ளார். இதேபோல் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான காக்னிசென்ட் பங்குகளைப் பெற உள்ளார்.