காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான 22வது சர்வதேச காமன்வெல்த் போட்டிகள் இந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியின் துவக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஹாக்கி வீரர் மன்பிரித் சிங் இந்தியக் கொடியேந்திச் சென்றார்.
போட்டியின் 6வது நாளில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் மும்முரம் காட்டினர். 5 தங்கம்,6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்கள் குவித்தனர். பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபில் டென்னிஸ், லான் பவுல்ஸ் என பல்வேறு பிரிவுகளில் நம் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். டேபில் டென்னிஸ் பிரிவில் பலம்வாய்ந்த சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்கம் வென்று வாகை சூடினர். ஐந்தாம் நாளன்று மிக சுவாரஸ்யமான சம்பவம் அறங்கேறியது. காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய அணி லான் பவுல்ஸ் என்ற விளையாட்டில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதை நிகழ்த்தியது 33-44 வயதுடைய இந்திய மகளிர் அணி. தென்னாபிரிக்கா அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்று சாதனை படைத்திருகிறார். மகளிர் ஹாக்கி அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி விழ்த்து வெற்றி கண்டுள்ளது. தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனாஸ் தகுதிச் சுற்றில் வென்றுள்ளனர். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் மன்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவ்வாறு இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் தங்கள் திமைகளை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பதக்கப் பட்டியலில் 14 பதக்கங்களுடன் 6ம் இடத்தில் இந்தியா இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் பல பதக்கங்கள் வெல்ல வாய்ப்பிருக்கிறது.