இந்திய தேர்தல் ஆணையத்திடம் குவியும் ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் – தேர்தல் தள்ளிப்போகுமா.?

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையர் எனப் பல்வேறு படிநிலைகளிலும் அதிமுக புகார்களை அளித்திருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புகார்கள் சென்றிருக்கின்றன. குறிப்பாக, ‘ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களுக்கு சரியான முகவரியில் இல்லை. ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஒரே முகவரியில் இல்லாமலும், இறந்தவர்களின் பெயர்கள்கூட வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், சுமார் 40,000 போலி வாக்குகள் இருப்பதாகவும்’ டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரைச் சந்தித்து சி.வி.சண்முகம் புகார் மனுவை வழங்கியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல, இடைத்தேர்தல் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்களை ஆதாரத்துடன் அளித்தால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைதான் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. தி.மு.க நாளுக்கு நாள் சூட்கேஸ்களை அதிகரித்துவருகிறது. வாக்காளர்களை லாரிகளில் கூட்டம் கூட்டமாக ஏற்றி மனிதப் பட்டிகளில் அடைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 40,000 பேர் போலி வாக்காளர்களாக இருக்கின்றனர். இவ்வாறான புகார்களால் இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.