இந்தியாவுடனான உறவு மேம்பட இனி சவுதி அரேபியா விசா முறைக்கு இந்தியர்களுக்கு காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை

அரசியல் இந்தியா உலகம் செய்திகள்

சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை’ என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்தியப் குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.