கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோதி பெயர் குறித்து பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
குற்றம் மற்றும் அவதூறு வழக்கில் 2 அல்லது அதற்கு கூடுதலான ஆண்டுகளில் தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள் தண்டனை காலத்துக்கு பிறகு அடுத்த 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் உள்ளது. அதன்படி, தண்டனை காலமான 2 ஆண்டு மற்றும் அதன்பிறகான 6 ஆண்டு என மொத்தம் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.