கர்நாடகாவில் ஆட்சியை அமைத்தது காங்கிரஸ்; தேர்தலில் அறிவித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்று 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்றே கெயெழுத்திடப்படும் என சித்தராமையா தெரிவித்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அதன்படி அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.2000 உரிமைத் தொகை, 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.