குக் வித் கோமாளி – வெற்றிக்கான காரணம்

சின்னத்திரை மற்றவை

ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில், மீடியாமேன்சன்ஸ் சார்பாய் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சாதாரண சமையல் நிகழ்ச்சிகளில் இருந்து மாறுபட்டதான ஒரு நிகழ்ச்சியாய் தனித்துத் தெரிந்திருந்த இதன் இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற அனைவரையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் புகழின் உச்சத்திற்கு இந்த நிகழ்ச்சி கொண்டு சென்றது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணங்களை அலசுகிறது இந்தப் பதிவு.

தீம்:

குக் வித் கோமாளி என்னும் இந்நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கான முக்கிய காரணம் இதன் மையப்பொருள் ஆகும். சாதரணமான சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து, அதில் வித்தியாசப்பட்ட சுற்றுகளை வைத்து அனைவரையும் இரசிக்க வைத்ததே இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கும் சாதனைகளுக்கும் காரணம்.

கிரியேட்டிவ் டீம்:

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் கோமாளிகள் ஜோடி சேருவதில் தொடங்கி, ஒப்பனை, சுற்றுகளின் வடிவமைப்பு மற்றும் ஒவ்வொரு சுற்றிலும் சுவாரசியமான தடைகள் அமைப்பது வரை அனைத்துமே மக்களைப் பெரிதாய்க் கவர்ந்திருந்தது.

எடிட் டீம்:

ஒவ்வொரு வார நிகழ்ச்சியும் சமூக வலைதள டிரெண்டிங் ஆகும் வகையில் நகைச்சுவை திரைப்பட வசனங்களையும், பாடல்களையும் நிகழ்ச்சியில் கலந்து ஒளிபரப்பியது மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்:

இதில் கலந்துக் கொண்ட அனைத்துப் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மத்தியிலான பிணைப்பு மக்களால் பெரிதும் இரசிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்களோடும் இந்த நிகழ்ச்சியை நெருக்கமாய் பிணைத்தது.

ப்ரொடக்‌ஷன் டீம்

நிகழ்ச்சியின் இயக்குனர் தொடங்கி, தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை முழுமனதாய் அளித்திருப்பது இந்த நிகழ்ச்சியில் கண் கூடாய்க் காண முடிந்தது. இது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான மற்றுமொரு காரணம்.

மக்களைப் பெரிதும் கவர்ந்த குக் வித் கோமாளி அடுத்த சீசனுக்கான காத்திருப்பையும் ஆவலையும் மக்கள் இப்போதே கொண்டுள்ளது இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கான சான்றாம். மேலும் பல நல்ல நிகழ்ச்சிகளை தர குக் வித் கோமாளி குழுவை நாமும் வாழ்த்துவோம்.

  • சந்தீப் குமார்

Leave a Reply

Your email address will not be published.