கொரோனா ஊரடங்கில் பாலியல் தொழிலாளர்கள் வாழ வழியின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடக் கோரி உச்ச நீநிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதன் ஒரு பாகமாக, சான்றுகள் ஏதும் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்சிருந்தது.
இது தொடர்பாக, இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளிக்கையில், ‘தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பாலியல் தொழிலாளர்கள் சான்று பெற்று வந்து, யு.ஐ.டி.ஏ.ஐ.,யில் கொடுத்தால் அதன் அடிப்படையில், இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டை வழங்க ஆவண செய்யப்படும்’ என, தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம்,” ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவர்கள் செய்கின்ற தொழிலுக்கு அப்பாற்பட்டு கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியிருப்பது அவசியம். இதனை அடிப்படையாக கொண்டு, பாலியல் தொழிலாளர்களுக்கு இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டைகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது”, என தெரிவித்தது.