ஐபிஎல் 2023 – பெரிதும் எதீர்பார்க்கப்பட்ட சென்னை, பெங்களூரு அணிக்களுக்கிடையேயான ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை விளையாட்டு

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 24வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியானது பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 83 ரன்களும், ஷிவம் துபே 52 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில், 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக க்ளென் மேக்ஸ்வெல் 76 ரன்களும், கேப்டன் டூ பிளெசிஸ் 62 ரன்களும் விளாசினர். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அண் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.