மத்திய அரசின் சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கூறினார். தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பந்த் பேசுகையில், ‘ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும், ஆன்லைனில் பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள், விதவைகள் உள்ளிட்டோர் அதிகமாக உள்ளனர். சைபர் கிரைம் புகார்களை குற்றமாகக் கருத வேண்டுமா அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கட்டுப்படுத்த வேண்டுமா அல்லது சைபர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா போன்ற விவாதங்கள் தொடர்கிறது, தகவல் தொழில்நுட்ப சட்டம் – 2000-ல் திருத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறினார்’.