அழிவின் விழும்பில் அமேசான் காடுகள் – ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்

உலகம் கோவிட் 19 செய்திகள் மற்றவை வனவிலங்குகள்

உலகிலேயே மிக அடர்த்தியான காடு அமேசான் நதிப் பாயும் அமேசான் நீர்காடுகள் ஆகும். பெரும்பான்மையான காடுகள் பிரேசில் நாட்டில் இருக்கிறது. அந்த அமேசான் காடுகள் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, கயானா, ஈக்குவேடார், பெரு என பல நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. பிரேசிலில் மட்டுமே கிட்டத்தட்ட 60% அமேசான் காடுகள் உள்ளது.
அமேசான் உலகின் நுரையீரல் என்றும் ஓர் சொல்லாடலும் உண்டு. ஒட்டுமொத்த அமேசான் காடுகளின் பரப்பளவு 6.7 மில்லியன் சதுர கி.மீ ஆகும். இக்காடுகளில் பாயும் அமேசான் நதியான அதிகப் பரப்பளவில் பாயும் நதியாகும். உலகில் எங்கும் காணமுடியாத பல அரியவகை மரங்கள், உயிரினங்கள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த அமேசான் காடுளில் மட்டும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மலைவாழ் பூர்வக்குடிகள் வாழ்கின்றனர்.
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட அமேசான் காடுகள் இப்போது பெரும் ஆபத்தில் உள்ளது. அமேசான் காடுகள் படுவேகமாக அழிக்கப்பட்டு இப்போது அழிவின் விழிம்பில் உள்ளது. தோல் மற்றும் மாட்டுக்கறித் தொழிற்சாளைகளுக்காகவே இக்காடுகள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் காடுகளை அழித்து வாழை, கரும்பு, தேயிலை போன்றவை பயிரிடப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அமேசான் காடுகளில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ செயற்கையாக ஏற்படுத்தப்படுவதாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டு உள்ளது. 2017-2018 காலக்கட்டத்தில் மட்டும் 7,900 கி.மீ அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஓர் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கின்றது. 2020ல் கொரோனாத் தொற்று காலத்தில் உலகெங்கும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் 20% அளவிற்கு காடுகள் அழிப்பு நடந்திருக்கிறது.
அமேசான் காடுகள் அழிவதால் பல நாடுகள் பல நாடுகள் பல இயற்கை ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறது. பருவநிலை மாற்றம், அங்கு வாழும் அறியவகை உயிரனங்கள் முற்றிலும் அழியும் அபாயமும் உள்ளது. இக்காடுகளின் பரப்பளவு குறைவதால் மழையின் அளவு வெகுவாகக் குறைந்து பஞ்சத்திற்கும் ஆளாகின்றனர் அங்கு வாழும் பூர்வகுடிகள்.
இக்காடுகள் அழிவதால் காற்றில் கலக்கும் கார்பன் அளவு கட்டுப்படுத்த முடியாது அளவிற்கு செல்லும் பேராபத்து  உள்ளது. இதே நிலை நீடித்தால் 2070க்குள் ஒட்டுமொத்த அமேசான் காடுகளும் அழிந்துப் போகும். அவ்வாறு அழிந்தால் உலகின் மிகப்பெரிய இயற்கை அரண் இல்லாமல் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *