டெல்லியில் உள்ள திகார் சிறைக்குள் போட்டி கும்பல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் டெல்லியைச் சேர்ந்த பிரபல ரவுடி தில்லு தாஜ்பூரியா கொல்லப்பட்டார். செய்திகளின்படி, தாஜ்பூரியாவை யோகேஷ் துண்டா மற்றும் பலர் சிறைக்குள் தாக்கியுள்ளனர்.
செப்டம்பர் 2021 இல் ரோகினி என்பவரை நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்ற வழக்கில் தாஜ்பூரியா முக்கிய குற்றவாளி ஆவார்.
தாஜ்பூரியாவை உடனடியாக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ரோஹித் என்ற மற்றொரு கைதியும் தாக்குதலில் காயமடைந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை 7 மணியளவில், திகார் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் குறித்து தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை அளித்த தகவலின் படி அவர்களில் ஒருவரான தில்லு என்கிற சுனில் மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு நபரான ரோஹித் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்” என்று மேற்கு மாவட்ட கூடுதல் டிசிபி அக்ஷத் கவுஷல் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள் உயர் பாதுகாப்பு வார்டின் முதல் தளத்தில் தங்க வைக்கப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பு கிரில்லைத் திறந்து பெட்ஷீட்களைப் பயன்படுத்தி தரை தளத்தில் குதித்துள்ளனர்.
அதே வார்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த தில்லு, அதே வார்டின் முதல் தளத்தில் காலை 06.15 மணியளவில் கோகி கும்பலுடன் (தீபக், யோகேஷ், ராஜேஷ் & ரியாஸ் கான்) இணைந்த நான்கு கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
ஒரே வார்டில் இரு கும்பல்களையும் பிரித்திருந்த வார்டின் இரும்பு கிரில்களை உடைத்து தில்லு தாஜ்பூரியாவை தாக்கியுள்ளனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.