சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை பற்றின தகவல்களை வழங்கும் இணைய தளமாக செயல்பட்டு வருகிறது ஐஎம்டிபி நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொவரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது ஐஎம்டிபி. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த ஆண்டு நடிகர் தனுஷிற்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் ‘ தி கிரே மேன்’ மற்றும் கோலிவுட்டில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், மாறன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து டாப் 10 தர வரிசையில் முதல் இடத்தை பிடித்து விட்டார் நடிகர் தனுஷ்.
இரண்டாவது இடத்தில் பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் தக்கவைத்துள்ளார். இந்த ஆண்டில் அவரின் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா-1, ஆர்ஆர்ஆர், கங்குபாய் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இடம் பிடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஆக்கிரமித்துவிட்டார்.
