நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2018-19-ல் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ரூ.2,326 கோடியாக இருந்த நிலையில் 2021-22-ல் ரூ.7,196 கோடியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க ஒன்றிய அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை எளிதாக அணுக முடிகிறது. மேலும், தேவைப்படும் வெளிப்படைத்தன்மையும் இதன் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இப்போது தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மெல்ல டிஜிட்டல் பேமெண்ட் முறையை நோக்கித் திரும்பி வருகின்றனர். எனவே, இந்த நேரத்தில் டிஜிட்டல் பேமெண்ட் முறைக்குக் கட்டணம் வசூலிக்க முடியாது.
அது எவ்வளவு குறைவான கட்டணமாக இருந்தாலும், இது அதற்கான சரியான நேரம் இல்லை என்றே நினைக்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அனைவருக்கும் கொண்டு செல்ல தொடர்ச்சியாக முயன்று வருகிறோம். ரிசர்வ் வங்கி இது தொடர்பாக மக்களிடம் கருத்துகளை மட்டுமே கேட்டுள்ளது. அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும்’ என்றார்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி மக்களிடம் கருத்துக் கேட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்போது வரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பொதுமக்களும் சரி, வணிகர்களும் சரி யுபிஐ பரிவர்த்தனைகளை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
இருப்பினும், இதை நிலை எப்போதும் இருக்க முடியாது. யுபிஐ நிறுவனங்களுக்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்யக் கட்டணத்தை அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரே கட்டணமாக இருக்காமல், தொகைக்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணமாகவே இருக்கும். அதாவது சிறு தொகை என்றால் குறைவான கட்டணமும், அதிக தொகை என்றால் அதிக கட்டணமும் வசூலிக்கப்படலாம் என சில மாதங்களுக்கு முன் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் 90 முறைக்கு மேல் கட்டணம் வசூலிப்பது கட்டாயம் என செய்திகள் வெளியாகியுள்ளன.