வடஇந்தியர்கள் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து உள்ளது. தமிழ்நாடடில் கடந்த சில மாதங்களாக வடஇந்தியர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வடஇந்தியாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் தமிழ்நாடு வந்து தமிழர்களின் வேலைகளை பறித்து குறைந்த கூலிக்கு வேலைகளை பறிக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது நம்முடைய பாதுகாப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில் வடஇந்தியர்கள் வருகை தவறு இல்லை என இசையமைப்பாளர், விஜய் ஆண்டனி கருத்து கூறியிருந்தார். அதில், வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடுகின்றனர் என்றார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தி இது விஜய் ஆண்டனி குறித்தும், பெண்கள் குறித்தும் இழிவான இவரின் இந்த கருத்திற்கு இயக்குனர் நவீன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இதுதான் நாதகவின் தரமா? அண்ணன் சீமானும் ஒரு சினிமாகாரர்தான் என்பதை மறந்துவிடாதீர். முதலில் மனிதராக மாறுங்கள். பிறகு தமிழர்களுக்காக கட்சி நடத்துங்கள். இந்த தரம்தாழ்ந்த பேச்சிற்காக விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேளுங்கள், என்று கூறி உள்ளார்.