“நீர் இன்றி அமையாது உலகு”
என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. தமிழக அரசு வனப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு உயர்த்த பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். வனப்பகுதிகளே நீர் ஆதாரமான மழைக்கு மிக முக்கியமானது. அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரில் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும் நீர் கருத்தரங்கில் கலந்து கொள்ள திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்றிருக்கிறார்.
புலம்பெயர் தமிழர்கள் நலவாரியத்தில் இவர் பங்கு வகிப்பதால் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பலரை சந்தித்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். புலம்பெயர் தமிழர்களின் மிக முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான தாய்மொழி தமிழை அமெரிக்கா வாழ் தமிழ் சிறார்களுக்கு பயிற்றுவிக்க வழிவகைகள் செய்ய கோரிக்கைகளை புலம்பெயர் தமிழர்கள் வைத்தனர்.