இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அநிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளி வெளியான படம் ‘டான்’. இந்தப்படத்தின் முன்பதிவு மிகவும் குறைவாக காணப்பட்டது. படம் வெளியான நாளில் கூட பல அரங்கங்கள் வெறிச்சோடியே காணப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான விமர்சனங்களும், படம் பார்த்த ரசிகர்களின் கருத்துக்களும் படத்திற்கு ஆதரவாக பரவத் தொடங்கியதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் அரங்கு நிறையத் தொடங்கியுள்ளன.
முதல் நாளில் 9 கோடி வசூலித்த படம், இரண்டாம் நாளில் 10 கோடி, மூன்றாம் நாளில் 11 கோடி என ஏறுமுகத்தைக் கண்டிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று நாட்களில் முப்பது கோடியை எட்டி இருக்கும் வசூல் கோடை விடுமுறையை ஒட்டி மேலும் அதிகரிக்கும் என கருதப் படுகிறது.